வாஷிங்டன்: மூன்று வயது அமெரிக்க குழந்தை துப்பாக்கி யால் தனது தாயை தவறுதலாக சுட்டதன் காரணமாக அந்தப் பெண் மாண்டார். சிகாகோ புறநகர் பகுதியில் சனிக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்தது. காரின் முன்னிருக்கைகளில் பெற்றோர் இருந்த வேளையில் பின்னால் அமர்ந்திருந்த குழந்தையின் கையில் துப்பாக்கி கிடைத்தது. விளையாட்டுத் தனமாக அதனை குழந்தை இயக்கியபோது முன்னால் அமர்ந்திருந்த அதன் தாயான 22 வயதுப் பெண்ணின் பின்கழுத்தில் தோட்டா பாய்ந்தது. டேஜா பென்னட் என்னும் அவர் சிகாகோ மருத்துவமனையில் மாண்டதாக அறிவிக்கப்பட்டது. துப்பாக்கிக்கு உரிமம் உள்ளதா என்பதை விசாரிக்க குழந்தை யின் தந்தையை காவல்துறை யினர் அழைத்துச் சென்றனர்.
3 வயது குழந்தை தவறுதலாக சுட்டதில் தாய் பலி
1 mins read
-

