உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடத்தப்பட்டுவரும் பேச்சுவார்த்தை முன்னேற்றம் கண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
உக்ரேன் நடுநிலையை எடுக்க இணங்கியுள்ளதைத் தொடர்ந்து, அமைதி உடன்பாட்டில் சில அம்சங்களை ரஷ்யா ஏற்றுக்கொள்ளும் சாத்தியம் இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்துவரும் ஆகப் பெரிய பூசல் கூடியவிரைவில் முற்றுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேட்டோ அமைப்பில் உக்ரேன் சேரக்கூடாது என்றும் அது நடுநிலையை எடுக்கவேண்டும் என்றும் ரஷ்யா வலியுறுத்திவருகிறது.
இந்நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவர தொடர்ந்து பேச்சுவார்த்தையை தொடர தயாராக இருப்பதாக உக்ரேன் கூறியுள்ளது. ஆனால் ரஷ்யாவின் அனைத்து நிபந்தனைகளுக்கும் அது கட்டுப்படாது என திட்டவட்டமாகக் கூறியுள்ளது.


