4.7 மில்லியன் மக்கள் கடும் வறுமையில் சிக்கியுள்ளனர்

4.7 மில்லியன் மக்கள் கடும் வறுமையில் சிக்கியுள்ளனர்

1 mins read
127a80ac-e186-42c8-b278-13a87f472b4d
-

மணிலா: வறு­மையை ஒழிக்­கும் போராட்­டத்­திற்கு இடை­யில், கொள்­ளை­நோய் கார­ண­மாக தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் மேலும் 4.7 மில்­லி­யன் பேர் கொடிய வறுமை நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­தாக ஆசிய மேம்­பாட்டு வங்கி கூறி­உள்ளது.

நாளொன்­றுக்கு 1.90 அமெ­ரிக்க டால­ருக்­கும் (2.60 வெள்ளி) குறை­வான வரு­மா­னம் ஈட்­டு­ப­வர்­கள், கடு­மை­யான வறு­மை­யில் உள்­ள­வர்­கள் என வரை­ய­றுக்­கப்­பட்டு உள்ளது.

சென்ற ஆண்டு 24.3 மில்­லி­யன் பேர் அல்­லது 650 மில்­லி­யன் பேர் கொண்ட தென்­கி­ழக்­கா­சி­யா­வின் மக்­கள்­தொ­கை­யில் 3.7 விழுக்­காட்­டி­னர் இந்த நிலை­யில் இருந்­த­தாக அறிக்கை கூறு­கிறது. இந்த எண்­ணிக்கை 2017, 2018, 2019ல் முறையே 21.2, 18, 14,9 மில்­லி­யன் எனக் குறைந்­து வந்தது.

கிரு­மிப் பர­வல் கார­ண­மாக பலர் வேலை­யி­ழந்­தது, மோச­ம­டை­யும் சமத்­து­வ­மின்மை போன்­ற­வற்­றின் கார­ண­மாக வறு­மை­யில் வாடு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­தாக வங்­கி­யின் தலை­வர் கூறி­னார். குறிப்­பாக, பெண்­கள், மூத்த வய­து­டை­ய­வர்­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.