பெய்ஜிங்: அதிகரித்து வரும் கிருமித்தொற்று சம்பவங்களால் சீனாவின் பல முக்கிய தொழில்நகரங்கள் முடக்கப்பட்டு வரும் வேளையில், வர்த்தக நகரமான ஷாங்காய் இப்போதைக்கு முடக்கப்படாது என்று அதன் அரசாங்கம் கூறியுள்ளது.
கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளால் வர்த்தகத்திலும் மக்களுக்கும் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக ஷாங்காய் அரசாங்கத்தின் துணை பொதுச்செயலாளர் கு ஹோங்குய் சொன்னார். மாறாக, ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஷாங்காயில் தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து குறிப்பிட்ட சில குடியிருப்பு கட்டடங்கள் முடக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், பொதுப் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.
சீனா, இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான கிருமிப் பரவலைச் சந்தித்து வருகிறது. லாங்ஃபெங், ஷென்ஸென், ஜிலின் நகரங்கள் ஏற்கெனவே முழுமையாக முடக்கப்பட்டுவிட்
டன.
சீனாவில் நேற்று முன்தினம் 5,000ஆக இருந்த தொற்று, நேற்று ஏறத்தாழ 3,000ஆக குறைந்தது.
இதில் மூன்றில் ஒரு பங்கு சம்பவங்கள், வடகொரியா, ரஷ்ய எல்லைகளை ஒட்டியுள்ள சீனாவின் ஜிலின் நகரில் பதிவானவை.
தற்போதைக்கு சீனாவின்
28 வட்டாரங்களில் கிருமி பரவிஉள்ளதாக சொன்ன தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர், நிலைமை மோசமானதாகவும் சிக்கலானதாகவும் உள்ளது என்றும் சொன்னார்.

