கடற்கரைகளை மூடும் ஹாங்காங்

கடற்கரைகளை மூடும் ஹாங்காங்

1 mins read
93985aa1-0eaa-4626-88fa-d2eafb699281
-

ஹாங்காங்: ஹாங்காங் மக்கள் முகக்கவசம் அணியாமல் கடற்கரைகளில் உலா வந்த புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து அந்நாட்டின் கடற்கரைகள் மூடப்படும் என்று அதன் தலைமை நிர்வாகி கேரி லாம் அறிவித்துள்ளார்.

தொற்று அதிகரித்துள்ளதை தொடர்ந்து, மலையேற்றத்தின் போதும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் ஹாங்காங்கில் உள்ளன.

"மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு அவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது," என்றார் கேரி லாம்.

இதற்கிடையே, உலகளவில் தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஜனவரி இறுதியில் இருந்து குறைந்து வந்த தொற்று, மார்ச் 7 முதல் 13ஆம் தேதி வரை உலகம் முழுவதும் வாராந்திர தொற்று எண்ணிக்கை

8 விழுக்காடு கூடியது.