வெலிங்டன்: மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இத்தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது இங்கிலாந்து.
இதையடுத்து, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, உலகக் கிண்ணத் தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மவுண்ட் மகனூயி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பூவா தலையா வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஓட்டங்களைக் குவித்த இந்திய அணி நேற்று மிகவும் தடுமாறியது. 36.2 ஓவர்களில் 134 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்தியா.
பின்னர் பந்தடிக்கத் தொடங்கிய இங்கிலாந்தின் தொடக்க வீராங்கனைகளை இந்தியா எளிதாக வீழ்த்தினாலும் அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஹெதர் நைட்டும் நாட் சிவரும் பொறுப்புடன் விளையாடினார்கள். எனவே, 31.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி பெற்றது.

