உக்ரேன் போர் கொடூரம்

உக்ரேன் போர் கொடூரம்

2 mins read
69258082-3d18-4fad-80c4-131f6f88b5d5
-

1,200 பேர் தஞ்சமடைந்திருந்த திரையரங்குமீது ர‌ஷ்யா தாக்குதல்

மரி­ய­போல்: உக்­ரேன்-ர‌ஷ்யா போர் மூன்­றா­வது வாரத்தை எட்­டி­யுள்ள நிலை­யில் ரஷ்­யப் படை­கள் திட்­ட­மிட்டே பொது­மக்­க­ளைக் குறி­வைத்து தாக்­கு­தல் நடத்­து­வ­தா­கக் குற்­றச்­சாட்­டு­கள் எழுந்­துள்­ளன.

இந்­நி­லை­யில், உக்­ரே­னின் மரி­ய­போல் நக­ரில் ஆயி­ரக்­க­ணக்­கான அப்­பாவி பொது­மக்­கள் 1,200 பேர் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த திரை­ய­ரங்கை ர‌ஷ்­யப் படை­கள் தகர்த்­துள்­ளன.

இது­பற்றி பேசிய உக்­ரேன் வெளி­யு­றவு அமைச்­சர் டிமிட்ரி குலேபா, "மரி­ய­போ­லில் ரஷ்­யப் படை­கள் இன்­னொரு கொடூ­ரத்தை நிகழ்த்­தி­யுள்­ளன. ரஷ்­யர்­க­ளுக்கு இங்கு மக்­கள் தஞ்­ச­ம­டைந்­தது தெரி­யா­மல் இருந்­தி­ருக்க வாய்ப்பே இல்லை. மரி­ய­போலை காப்­பாற்­றுங்­கள்," என்­றார்.

அக்­கட்­ட­டத்­தின் அடித்­த­ளத்­தில் மக்­கள் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்­த­தால், தாக்­கு­த­லில் அவர்­கள் உயிர்­பி­ழைத்­தி­ருப்­ப­தாக உள்­ளூர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் பிபி­சி­யி­டம் கூறி­னார்.

ஜெர்­மன் நாடா­ளு­மன்­றத்­தில் ஸெலன்ஸ்கி

இதற்­கி­டையே, காணொளி அழைப்பு மூலம் ஜெர்­மன் நாடா­ளு­மன்­றத்­தில் உரை­யாற்­றிய உக்­ரேன் அதி­பர் ஸெலன்ஸ்கி, ஜெர்­மனி தலை­மை­யேற்று, போரை முடி­வுக்கு கொண்டு வர­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார்.

"சுதந்­தி­ரத்­திற்­கும் சுதந்­தி­ர­மின்­மைக்­கும் இடை­யில் இப்­போது ஐரோப்­பா­வில் ஒரு சுவர் உள்­ளது. அந்த சுவரை ஜெர்­மன் அதி­பர்­தான் தகர்க்க வேண்­டும்," என்­றார் அவர். மேற்­கத்­திய தலை­வர்­கள், ர‌ஷ்­யா­வைத் தடுக்க போது­மான நட­வ­டிக்­கையை எடுக்­க­வில்லை என்­றார் அவர்.

போலந்­தில் பாது­காப்பு

இதற்­கி­டையே, போலந்­தில் படை­க­ளை­யும் பாது­காப்­பை­யும் பலப்­ப­டுத்­தப் போவ­தாக பிரிட்­டன் கூறி­யுள்­ளது.

100 வீரர்­கள் உட்­பட போலந்­தில் விமான எதிர்ப்பு ஏவு­கணை அமைப்பு நிறு­வப்­பட உள்­ள­தாக தற்­காப்பு அமைச்­சர் பென் வால்ஸ் கூறி­யுள்­ளார்.

ர‌ஷ்­யா­வின் தாக்­கு­த­லில் இருந்து அதன் வான்­வெ­ளி­யைப் பாதுகாக்­கும் வித­மாக இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் சொன்­னார்.