7.4 ரிக்டர் அளவில் ஜப்பானில் நிலநடுக்கம்; நால்வர் மரணம்

7.4 ரிக்டர் அளவில் ஜப்பானில் நிலநடுக்கம்; நால்வர் மரணம்

1 mins read
01c828d1-c0a5-4d52-8c7c-775de5a7b8e7
-

ஜப்பானில் வடகிழக்கு மாநிலங்களில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். நால்வர் மாண்டுவிட்டனர். ஃபுக்குஷிமா நகரின் வடக்கே செண்டாய் பகுதியில் புல்லட் ரயில் ஒன்று தடம் புரண்டது. குடியிருப்புகள் உட்பட பொது இடங்கள், வணிக வளாகங்கள் சேதமடைந்தன. ஏறத்தாழ 20 லட்சம் மக்கள் மின் இணைப்பு இல்லாமல் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் கடலில் 3 மீட்டர் உயரத்துக்கு பேரலைகள் எழும்பியதாகக் கூறப்படுகிறது. சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது. படத்தில், சேதமடைந்த கடையில் உள்ள பொருள்களை ஊழியர் ஒருவர் எடுக்கிறார்.

படம்: ஏஎஃப்பி