உக்ரேனின் மெலிட்டோபோல் நகர மேயர் இவான் பெடோரோவை கடந்த வாரம் ரஷ்யப் படையினர் கடத்தி சென்றனர்.
அவர் ரஷ்யப் படைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததால் கடத்தப்பட்டதாக உக்ரேன் குற்றம் சாட்டியது.
இந்நிலையில் கடத்தப்பட்ட மேயர் ரஷ்யப் படையின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.
அவரை மீட்பதற்காக உக்ரேன் ராணுவம் தான் பிடித்து வைத்திருந்த 9 ரஷ்ய வீரர்களை திருப்பி அனுப்பியதாகத் தகவல்கள் கூறுகின்றன.

