செய்திக் கொத்து

செய்திக் கொத்து

2 mins read
f9a10fcc-d9df-4277-94b6-4f168d00f035
-

மீண்டும் அதிகரிக்கும் தொற்று

ஜெனீவா: உலகில் ஒரு மாத காலம் குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் அபாயச் சங்கு ஊதி இருக்கிறது.

வேகமாகப் பரவக்கூடிய ஓமிக்ரானும் அந்தக் கிருமியில் இருந்து உருவான பிஏ.2 என்ற உருமாறிய கிருமியும் பொதுச் சுகாதார, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் அகற்றப்படுவதும் இதற்குக் காரணம் என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

பல நாடுகளிலும் மார்ச் 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை புதிதாக 11 மில்லியன் பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 43,000க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்து இருக்கிறார்கள் என்று நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில், உலகின் சில பகுதிகளில் கொரோனா மீண்டும் தலையெடுப்பதால் அனைவரும் மிகவும் விழிப்புடன் இருந்துவர வேண்டும் என்று இந்திய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் சம்பந்தப்பட்ட தரப்புகள் முழு விழிப்பு நிலையில் இருந்து தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவசர உத்தரவு பிறப்பித்தார்.

கம்போடிய எதிர்க்கட்சித் தலைவருக்கு

10 ஆண்டு சிறைத் தண்டனை

கம்போடியாவில் நாடு கடத்தப்பட்ட எதிர்கட்சித் தலைவர் சாம் ரென்சி உட்பட 20 பேருக்கு கம்போடிய நீதிமன்றம் சிறைத் தண்டனை

விதித்தது. ரென்சி உள்ளிட்ட 6 முக்கிய பிரமுகர்களுக்கு

10 ஆண்டும் மற்றவர் களுக்கு ஐந்தாண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை செய்தியறிந்த உறவினர்கள் நீதிமன்ற வாசலில் கதறி அழுதனர். தேசதுரோகம், தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டு களுக்காக 2019ல் கிட்டத்தட்ட 150 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

படம்: ராய்ட்டர்ஸ்