சீனாவில் விதிமுறைகள் தளர்வு

சீனாவில் விதிமுறைகள் தளர்வு

1 mins read
fdee7ac5-b0db-440a-8736-b3be2e729862
-

பெய்­ஜிங்: ஈராண்டு காணாத மோச­மான கிரு­மிப் பர­வல் கார­ண­மாக சீனா­வின் சுகா­தார கட்டமைப்பு நெருக்­க­டிக்கு ஆளாகி உள்­ள­தால், இது­வரை கடைப்­பி­டித்து வந்த கடும் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­உள்­ளது அந்நாடு.

இதன்­படி முக்­கி­ய­மாக, கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­படும் அனை­வ­ரும் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­ட­வேண்­டும் என்ற விதி­மு­றையை நீக்­கி­யுள்­ளது. மாறாக, அவர்­கள் பொது தனி­மைப்­ப­டுத்­தல் மையத்­திற்­குச் செல்ல வேண்­டும்.

தொற்­றில் இருந்து மீண்­ட­வர்­கள் 14 நாள்­க­ளுக்­குப் பதி­லாக ஏழு நாள்­கள் தங்களைத் தனிமைப்­படுத்­திக் கொண்­டால் போதும்.

சுய கிரு­மித்­தொற்று பரி­சோ­த­னைக்கு சென்ற வாரம் சீனா அனு­மதி அளித்­தி­ருந்­தது.

இந்தத் தளர்­வு­கள் எதிர்­கா­லத்­தில் சீனா ஒரு­வேளை, கிரு­மித்­தொற்றை நிரந்­தர நோயாக கையா­ளக்­கூ­டும் என்ற எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதற்­கி­டையே, ‌ஷென்­ஸென் நக­ரில் அத்­தி­யா­வ­சி­ய­மற்ற வர்த்­த­கங்­களை மீண்­டும் தொடங்க அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

தென்­கொ­ரி­யா­வில் உச்­சம்

தென்­கொ­ரி­யா­வில் ஒரே நாளில் ஆக அதி­க­மாக 621,328 பேரைக் கிருமி தொற்­றி­யது, 429 பேர் மாண்டு­விட்­ட­னர்.

இந்­நி­லை­யில், கிரு­மிப் பர­வ­லுக்கு எதி­ரான கட்­டுப்­பா­டு­களை முடி­வுக்கு கொண்டு வர அந்­நாடு திட்­ட­மி­டு­கிறது.

பொதுமக்கள் கருத்­து­க­ளைக் கேட்­ட­றிந்த பிறகு, வரும் வாரத்­தில் இந்த தளர்­வு­கள் கொண்டு வரப்­ப­டக்­கூடும் என்று கூறப்­ப­டு­கிறது. அங்கு 86.6 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.