லண்டன்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரில் லில் குழுவை 4-1 என்ற ஒட்டுமொத்த கோல்கணக்கில் வீழ்த்திய செல்சி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
பெனால்டி வாய்ப்பில் முதல் கோலைப் போட்டு முன்னிலை பெற்றது லில்.
எதிரணியின் கிறிஸ்டியன் புலிசிச உடனடியாக சமன் செய்தார். செல்சி குழுத் தலைவர் செசார் மேலும் ஒரு கோலைப் போட நேற்றைய ஆட்டத்தை 1-2 என வென்றது செல்சி.
"எங்களுடன் மோதுவதற்கு மற்ற குழுக்கள் பயப்படவேண்டும். அம்மாதிரியான ஒரு குழுவாக உருவெடுப்பதே எங்கள் நோக்கம். இதுதான் எங்களுக்குள் இருக்கும் மிகச்சிறந்த திறனை வெளிக்கொணர்கிறது," என்றார் செல்சி நிர்வாகி தாமஸ் டுக்கெல்.
மற்றோர் ஆட்டத்தில் வில்லா ரியாலிடம் 1-4 என்ற ஒட்டுமொத்த கோல்கணக்கில் தோற்ற யுவென்டஸ் சாம்பியன்ஸ் லீக் தொடரில் இருந்து வெளியேறியது.

