முன்னாள் காற்பந்து வீரர் கண்ணனுக்கு எதிரான வாழ்நாள் தடை மீட்டுக்கொள்ளப்பட்டது

முன்னாள் காற்பந்து வீரர் கண்ணனுக்கு எதிரான வாழ்நாள் தடை மீட்டுக்கொள்ளப்பட்டது

1 mins read
b09cd3cd-79a7-45bd-8be1-7351ed7a5ec6
காற்­பந்து தொடர்­பான மோச­டி­யில் ஈடு­பட்­டதற்காக கண்­ண­னுக்கு, 1995ல் சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது. (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்) -

முன்னாள் தேசிய காற்பந்து வீரர் கண்ணன், முன்னாள் காற்பந்து நடுவர் திருராஜமாணிக்கம் ஆகியோருக்கு எதி­ராக விதிக்­கப்­பட்ட வாழ்­நாள் தடையை சிங்­கப்­பூர் காற்­பந்­துச் சங்­கம் மீட்­டுக்­கொண்டுள்ளது.

2021ஆம் ஆண்டு இவர்கள் சமர்பித்த மேல் ­மு­றை­யீட்டு மனுவைப் பரிசீலித்த பிறகு, அவர்களுக்கு விதிக்­கப்­பட்ட தடையை மீட்டுக்கொள்ள சங்கம் இந்த வாரம் முடிவெடுத்தது.

காற்­பந்து தொடர்­பான மோச­டி­யில் ஈடு­பட்­டதற்காக திரு ராஜமாணிக்கத்துக்கு 1994ஆம் ஆண்டிலும், திரு கண்­ண­னுக்கு 1995ஆம் ஆண்டும் தடை விதிக்கப்பட்டது.

மேல்முறையீட்டைப் பரிசீலனை செய்வதில் பல அம்சங்களைக் கருத்தில் கொள்ளவேண்டியிருந்ததாக சங்கத்தின் தலைவர் லிம் கியா தோங் குறிப்பிட்டார். இந்த முடிவு காற்­பந்து தொடர்­பான மோச­டியை இலேசாக எடுத்துக்கொள்கிறோம் என்று அர்த்தமல்ல. காற்பந்து விளையாட்டில் மோசடிக்கு இடமில்லை என்பதில் சங்கம் உறுதியாக உள்ளது என்றார் அவர். கடந்த 26 ஆண்டுகளில் கண்ணன், ராஜமாணிக்கம் இருவரும் பல முறை மேல்முறையீடு செய்த பிறகே, இந்த முடிவு இப்போது எடுக்கப்பட்டதாக திரு லிம் குறிப்பிட்டார்.

காற்பந்து விளையாட்டில் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அடுத்த ஆறு மாதங்களுக்குள் இருவரும் மேற்கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையை சிங்­கப்­பூர் காற்­பந்­துச் சங்­கம் முன்வைத்துள்ளது.