அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் ஒரு 13 வயது சிறுவன் ஓட்டிச்சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சிறுவன் உட்பட ஒன்பது பேர் மாண்டனர். பலத்த காயங்களுடன் இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மற்றொரு வாகனத்தில் இருந்த ஏழு பேரும், சிறுவன் ஓட்டிய வாகனத்தில் இருந்த ஒரு நபரும் மாண்டவர்களில் அடங்குவர்.
விபத்து ஏற்பட்ட தாக்கத்தில் இரண்டு வாகனங்களும் தீப் பிடித்தன.
சிறுவன் ஓட்டிய டிரக் வாகனத்தின் முன்பகுதி சக்கரத்தில் வெடிப்பு ஏற்பட்டதால், டிரக் எதிர்வரும் தடத்தில் வந்துகொண்டிருந்த வாகனம் மீது மோதியது.
விபத்து நடந்த பகுதியில் வேகக் கட்டுப்பாடு 120 கிலோமீட்டர். அதனால் இரண்டு வாகனங்களும் வேகமாகச் சென்றுகொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.
சிறுவன் ஏன் வாகனத்தைச் செலுத்திகொண்டிருந்தான், அவனுடன் இருந்த 38 வயது ஆடவர் எந்தக் காரணத்தினால் அவனை வாகனத்தை ஓட்ட அனுமதித்தார் ஆகிய தகவல்களைக் காவல் துறை ஆராய்ந்துவருகிறது.
டெக்ஸஸ் மாநிலத்தில் 14 வயதிலிருந்து வாகனம் ஓட்டும் வகுப்பறை பயிற்சிகளுக்குச் செல்லலாம். ஆனால் 15 வயதில் தான் ஓட்டுநர் உரிமம் பெறமுடியும்.


