மாஸ்கோ: உக்ரேனிய அதிகாரிகள் அமைதிப் பேச்சு வார்த்தையை நிறுத்த முயற்சி ெசய்வதாக ரஷ்ய அதிபர் புட்டின் குற்றம்சாட்டியுள்ளார்.
வெள்ளிக்கிழமை அன்று ஜெர்மன் பிரதமருடன் புட்டின் பேசினார்.
அப்போது, உக்ரேனிய அதிகாரிகள் அமைதிப் பேச்சுக்கு முட்டுக் கட்டையாக இருப்பதாகவும் மாஸ்கோ தீர்வு காணத் தயாராக இருப்பதாகவும் புட்டின் தெரிவித்தார்.
உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வம் இருப்பது போல பேசி வந்தாலும் அதில் தீவிர மாக ஈடுபட்டதாகத் தெரியவில்லை. மக்கள் வெளியேறுவதற்காக ரஷ்யா போரை நிறுத்தியபோது அதற்கு உக்ரேன் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில் உயிர்ச் சேதத்தைத் தடுப்பதற்காக ரஷ்யா குடியிருப்பாளர்கள் மீது குண்டுகளை வீசுவதைத் தவிர்த்து வருகிறது. ஆனால் உக்ரேனிய அதிபர் இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதாகவும் காலம் கடத்துவதில் அவர் குறியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் குடியிருப்பாளர்கள் குறி வைத்து தாக்கு வதாக உக்ரேனிய அரசாங்கம் கூறுகிறது. சில நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ரஷ்யா-உக்ரேனிய அமைதிப் பேச்சு ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெர்மனி பிரதமருடன் தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், உக்ரேனிய அரசாங்கம் அமைதிப் ேபச்சை நிறுத்துவதற்கான அனைத்து வழிகளையும் பின்பற்றுவதாகக் கூறி யுள்ளார். இதற்காக அதிக யதார்த்தமற்ற கோரிக்கைகளை அது முன் வைப்பதாகவும் ரஷ்ய அதிபர் புட்டின் தெரிவித்தார்.

