ஹாங்காங்: ஹாங்காங்கில் தொற்று கட்டுக்கடங்காமல் பெருகி வரும் சூழ்நிலையில் அதன் தலைமை நிர்வாகியான கேரி லாம், கொவிட்-19 சுய பரிசோதனையில் தொற்று இருந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என்றும் அப்படிச் செய்யாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஹாங்காங்கில் தொற்றுச் சம்ப வங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்து வதற்கான நடவடிக்கைகள் தீவிர மாக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக இம்மாதம் 7ஆம் தேதி இணையப்பக்கம் ஒன்று தொடங்கப்பட்டது. வீட்டில் செய்யப் படும் கொவிட்-19 சுய பரிசோதனை யில் தொற்று இருப்பது தெரிய வந்தால் இதில் உடனே பதிவு செய்ய வேண்டும்.
தொற்றால் பாதிக்கப்பட்டு அதிக ஆபத்தை எதிர்நோக்கும் நோயாளி களை உடனடியாக அடையாளம் கண்டு சமூக வசதிகளில் தனிமைப் படுத்துவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கேரி லாம், தொற்று இருந்தால் அரசாங்கத்துக்குத் தெரி விப்பது கட்டாயமாகும் என்றார்.
குடியிருப்பாளர்கள் பொறுப்புடன் நடந்து அரசாங்கத்துக்கு ஒத்து ழைப்பு வழங்க வேண்டும். இதனை மீறுவோருக்கு எதிராக சட்ட நட வடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பில் ஒரு சிலர் மட்டுமே கைது செய்யப் பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
புதிய உத்தரவை மீறுவோருக்கு அதிகபட்சமாக 25,000 ஹாங்காங் டாலர் (S$4,330) அபராதம் அல்லது ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஹாங்காங்கில் வியாழக்கிழமை வரையில் புதிதாக 21,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் 289 பேர் உயிரிழந்தனர்.
கடந்த ஐந்து நாள்களாக சோதனைக் கூடங்களில் செய்யப் படும் பிசிஆர் பரிசோதனைகளைவிட வீட்டில் செய்யப்படும் சோதனைகள் மூலம் அதிகமானவர்களுக்கு தொற்று இருப்பது தெரிய வந்து உள்ளது.
ஆனால் தாங்கள் தனிமைப் படுத்தப்படலாம் அல்லது குடும்பத் திடமிருந்து பிரிக்கப்படலாம் என்ற அச்சத்தில் பலர் தொற்று இருப்பதை முறைப்படி தெரிவிப்பதில்லை என கூறப்படுகிறது.

