புளோரிடா: சந்திரனுக்குச் செல்லும் அடுத்த தலைமுறை ஏவுகணையை அமெரிக்கா தயாரித்துள்ளது. வெள்ளிக் கிழமை அன்று ஏவுகணை தயாரிக்கப்பட்ட ெகன்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து புளோரிடாவில் உள்ள ஏவுதளத்திற்கு அது தனது பயணத்தைத் தொடங்கியது. வரும் வாரங்களில் ஏவு கணையின் ஆற்றலை மதிப்பிட இறுதிக்கட்ட சோதனைகள் நடத்தப்படும். 'ஓரியன்' எனும் விண்வெளி கலத்துடன்கூடிய எஸ்எல்எஸ் எனும் விண்ெவளி ஏவுகணை கட்டமைப்பு சுமார் 32 மாடி உயரம் கொண்டது.
சந்திரன் ஏவுகணை
1 mins read
சந்திரன் ஆய்வுக்கான திட்டங்களைப் புதுப்பித்து அமெரிக்கா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. படம்: ஏஎஃப்பி -

