பெய்ஜிங்: சீன அதிபர் ஸி ஜின்பிங், நாட்டில் அறவே தொற்று இல்லாத கொள்கையைத் தொடர்ந்து பின்பற்ற முடிவு செய்துள்ளார்.
இரண்டு நாள்களுக்கு முன்பு கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் வழிகாட்டிகளை தேசிய சுகாதார மன்றம் வெளியிட்டது.
இந்த நிலையில் அதிபர் ஸி, நாட்டின் உயர் மட்ட தலைவர்கள் இடையே உரையாற்றினார்.
அப்போது மக்களுக்கும் அவர் களுடைய வாழ்க்கைக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் தொற்று பரவுவதை கூடியவிரைவில் தடுத்து நிறுத்தி யாக வேண்டும் என்று அவர் கூறினார். திரு ஸியின் உரையை அரசாங்க தொலைக்காட்சியான சிசிடிவி நேரடியாக ஒளிபரப்பியது.
செவ்வாய்க்கிழமை இரவு தேசிய சுகாதார மன்றம், அதன் இணையத் தளத்தில் ஒரு புதிய ஆவணத்தை பதிவேற்றியது. கிருமித்தொற்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் திட்டம் என்று அந்த ஆவணத்துக்குப் பெயரிடப்பட்டிருந்தது. இது, 1.4 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட நாட்டின் கொவிட்-19 கொள்கையை மாற்றி அமைக்கும் ஒன்பதாவது திருத்தப்பட்ட ஆவணமாகும். மிதமான அறிகுறிகள் கொண்டவர்கள் மருத்துவமனைக்கு வரவேண்டியதில்லை. இதற்குப் பதிலாக மத்திய தனிமைப்படுத்தும் இடங்களுக்கு நோயாளிகள் செல்ல லாம் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சுகாதாரத் துறை நெருக்கடிக்கு உள்ளாவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதிகமானவர்கள் மித மான அறிகுறிகளால் பாதிக்கப் படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

