புளோரிடா பேருந்தில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி

புளோரிடா பேருந்தில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி

1 mins read
3d87ecd5-f9da-40dc-a02a-92fda262b3db
-

மியாமி: புளோ­ரி­டா­வில் பொதுப் பேருந்­தில் பய­ணம் செய்த ஒரு­வர், சர­மா­ரி­யா­கச் சுட்­ட­தில் இரு­வர் கொல்­லப்­பட்­ட­னர். மேலும் இரு­வர் படு­கா­யம் அடைந்­த­னர்.

வியா­ழக்­கி­ழமை பிற்­ப­க­லில் புளோ­ரிடா நகர காவல்­துறை தலை­மை­ய­கத்­துக்கு அருகே இந்­தச் சம்­ப­வம் நடை­பெற்­றது.

ஓட்­டு­நர் சாமர்த்­தி­ய­மா­கச் செயல்­பட்டு பேருந்தை காவல்­துறை தலை­மை­ய­கத்­துக்கு ஓட்­டிச்­சென்­றார்.

இதையடுத்து துப்­பாக்­கிக்­கா­ரன் சரண் அடைந்­தான். காயம் அடைந்­த­வர்­க­ளுக்கு உடனே முதலு­தவி சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வத்­தில் இரு­வர் காயம் அடைந்­த­தா­க­வும் அவர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­தா­க­வும் காவல்­து­றை­யி­னர் டுவிட்­டர் பதி­வில் தெரி­வித்­த­னர்.

ஒரு­வ­ரது உடல்­நிலை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தாக ஃபோர்ட் லாடெர்­லி­டே­லில் உள்ள புரோ­வார்ட் சுகா­தார மருத்­துவ நிலைய பேச்­சா­ளர் ஒரு­வர் சொன்­னார்.

துப்­பாக்­கி­யால் சுட்­ட­வ­னின் நோக்­கம் பற்றி தெரி­ய­வில்லை.

சந்­தேக நபர் சுடத் தொடங்­கி­ய­தும் புரோ­வர்ட் பொதுப்­பே­ருந்து ஓட்­டு­நர் உட­ன­டி­யாக அரு­கில் இருந்த காவல் தலை­மை­ய­கத்­துக்கு பேருந்தை திருப்­பி­னார். அப்­போது வழியை மறித்­துக் கொண்­டி­ருந்த காரை­யும் அவர் இடித்­துச் சென்­றார் என்று ஃபோர்ட் லாடெர்­டேல் காவல் பிரி­வின் தற்­கா­லி­கத் தலை­வர் லூயிஸ் ஆல்­வா­ரெஸ் தெரி­வித்­தார். ஓட்­டு­நர் காயம் அடை­ய­வில்லை. மூன்று பய­ணி­க­ளுக்கு லேசான சிராய்ப்­புக் காயம் ஏற்­பட்­டது. துப்­பாக்­கிக்­கா­ர­னி­டம் காவல்­துறை அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.