கலிபோர்னியா ஆடவரின் கடைசி நிமிடக் காணொளி

லாஸ் ஏஞ்­ச­லஸ்: இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு நடந்த சம்­ப­வத்­தில் அதி­காரி ஒரு­வர் கழுத்­தில் காலை வைத்து அழுத்­தி­ய­தால் உயி­ரி­ழந்த கலி­போர்­னியா ஆட­வ­ரின் கடைசி நிமிடக் காணொளி வியா­ழன் அன்று வெளி­யி­டப்­பட்­டது.

காவல் துறை­யி­னர் அழுத்­திப் பிடித்­த­தால் அவர் மர­ண­ம­டைந்­தது போல காணொ­ளிக் காட்­சி­கள் காட்­டு­கின்­றன.

போதைப் பொருள் உட்­கொண்­ட­தாக சந்­தே­கிக்­கப்­பட்ட எட்­வர்ட் பிரான்ஸ்­டீனை மடக்­கிப் பிடித்த நெடுஞ்­சாலை சுற்­றுக்­கா­வல் அதி­கா­ரி­கள் அவரை பாச­டி­னா­வுக்கு அரு­கில் உள்ள சுற்­றுக்­கா­வல் நிலைய வாகன நிறுத்­து­மி­டத்­துக்கு அழைத்­துச் சென்­ற­னர் என்று காவல்­துறை, பிரே­தப் பரி­சோ­தனை அறிக்கை தெரி­விக்­கிறது.

ரத்த மாதிரி ஏன் தேவைப் படு­கிறது என்று பிரான்ஸ்­டீன் கேட்­ட­தற்கு அவரை அதி­கா­ரி­கள் குப்­பு­றத் தள்­ளி­விட்­ட­னர். அதி­காரி ஒரு­வர், அவ­ரது கழுத்தின் மீது காலை வைத்து அழுத்­திப் பிடித்­துக் கொண்­டார்.

"என்­னால் மூச்­சு­விட முடி­ய­வில்லை," என்று திரும்பத் திரும்ப பிரான்ஸ்­டீன் சொல்­லி­யும் அதி­காரி காலை எடுக்­க­வில்லை. சில நிமி­டங்­களில் 38 வயது பிரான்ஸ்­டீன் மயக்­க­ம­டைந்­தார். பிறகு அதே நாளில் அவர் உயி­ரிழந்­து­விட்­ட­தாக துணை மருத்­து­வர்­கள் அறி­வித்­த­னர்.

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நடந்த இந்­தச் சம்­ப­வம் அமெ­ரிக்­கா­வில் மட்­டு­மல்­லா­மல் உல­கம் முழு­வ­தும் அதிர்ச்சி அலையை ஏற்­ப­டுத்­தி­யது.

பிரான்ஸ்­டீ­னின் கடைசி நிமி­டங்­க­ளைக் காட்­டும் காணொ­ளியை வெளி­யி­டு­வ­தற்கு கலி­போர்­னியா தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கம் ஆட்­சே­பணை தெரி­வித்­தது. ஆனால் அதனை வெளி­யிட நீதி­பதி அனு­மதி அளித்­தார்.

இந்த விவ­கா­ரத்­தில் பிரான்ஸ்­டீ­னின் குடும்­பத்­தி­னர் சுற்­றுக்­கா­வல் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக வழக்­குத் தொடுத்­துள்­ள­னர். திரு பிரான்ஸ்­டீ­னுக்கு என்ன நேர்ந்­தது என்­பதை பொது­மக்­கள் தெரிந்து கொள்­வது அவ­சி­யம் என்று அவ­ரது குடும்­பத்­தைச் சேர்ந்த பிர­யானா பாலோ­மினோ, 22, தெரி­வித்­தார்.

"காணொ­ளியை வெளி­யி­டு­வது, அதை பலர் பார்ப்­பது மன வேதனை அளிக்­கிறது," என்று திரு­மதி பாலோ­மினோ வியா­ழக்­கி­ழமை கூறி­னார்.

"நீதி கிடைக்க வேண்­டும்," என்று அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!