மியன்மார் இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கு விதித்திருந்த தடையை அகற்றவுள்ளது.
வரும் ஏப்ரல் 17ஆம் தேதி அது மீண்டும் அனைத்துலகப் பயணிகள் சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளது.
மியன்மார் ராணுவம் சனிக்கிழமை (மார்ச் 19) அன்று இதைத் தெரிவித்தது.
கடந்த 2020ஆம் ஆண்டு பெருந்தொற்று சூழல் தொடங்கியபோது மியன்மார் பயணிகளுக்குத் தடை விதித்ததை அடுத்து, சுற்றுப்பயணத் துறை பெரும் வீழ்ச்சி அடைந்தது.
மியன்மாரில் கடந்தாண்டு நடந்த ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு, ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றால் அதன் பொருளியல் மேலும் மோசமானது.
சுற்றுப்பயணத் துறையை மேம்படுத்தவும் மியன்மாருக்கு வரும் வெளிநாட்டவருக்கு சீரான பயணத்தைத் தரவும் விமானச் சேவைகள் தொடங்கப்படுவதாக மியன்மார் ராணுவம் கூறியது.
மியன்மாருக்குச் செல்பவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அவர்கள் அங்கு சென்ற பின்னர் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இரண்டு பிசிஆர் கிருமிப் பரிசோதனைகளையும் செய்ய வேண்டும் என்று மியன்மார் சுகாதார அமைச்சு கூறியது.

