உலகின் ஆக மகிழ்ச்சியான நாடு

உலகின் ஆக மகிழ்ச்சியான நாடாக தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடம் வகிக்கிறது பின்லாந்து. ஆஃப்கானிஸ்தான் மிகச் சோகமான நாடாகவும் இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஐக்கிய நாடுகளின் ஆதரவு பெற்ற அமைப்பு ஒன்று உலகின் ஆக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.


ரஷ்ய - உக்ரேன் போருக்கு முன்னதாக எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தற்போதைய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், வட ஐரோப்பிய நாடான பின்லாந்து உலகின் ஆக மகிழ்ச்சியான நாடாக முதலிடம் வகிக்கிறது. டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட வட ஐரோப்பிய நாடுகள் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.


மக்களை நேரடியாகச் சந்தித்து, நாட்டின் பொருளாதார, சமூக புள்ளி விவரங்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இந்த பட்டியல் தயார் செய்யப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடான லெபனான், தென் அமெரிக்க நாடான வெனிசுலா, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் ஆகியவை பட்டியலில் கடைசி இடங்களை பிடித்துள்ளன.அமெரிக்காவுக்கு 16 வது இடமும், ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்சுக்கு 15வது மற்றும் 20வது இடமும் கிடைத்துள்ளன

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!