இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க போராடும் உக்ரேன்

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க போராடும் உக்ரேன்

2 mins read
e3f3a661-0c5f-445f-9e88-d335179b4548
ரஷ்யத் தாக்குதலில் கொல்லப்பட்ட உக்ரேன் குழந்தைகளின் நினைவாக அந்நாட்டின் லிவ் நகரில் குழந்தைகளை அமர வைத்து அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படும் 109 காலியான 'ஸ்ட்ரோலர்கள்' வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ் -

லிவ்: உக்­ரே­னின் மரி­ய­போல் நக­ரில் திரை­ய­ரங்­கம் ஒன்­றின்­மீது ர‌ஷ்­யப் படை­யி­னர் தாக்­கு­தல் நடத்தி இரண்டு நாள்­கள் ஆகி­விட்ட நிலை­யில், அந்த இடி­பா­டு­களில் சிக்­கி­யுள்­ள­வர்­களை மீட்க உக்­ரேன் வீரர்­கள் போராடி வரு­கின்­ற­னர்.

கிட்­டத்­தட்ட 1,200 பேர் தஞ்­ச­மடைந்­தி­ருந்த அந்த திரை­ய­ரங்கை ர‌ஷ்­யப் படை­யி­னர் சின்­னா­பின்­ன­மாக்­கி­னார். இதை­ய­டுத்து, இடி­பாடு­களில் பலர் சிக்­கி­யி­ருக்­கக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

இது­பற்றி பேசிய உக்­ரேன் அதி­பர் ஸெலன்ஸ்கி, திரை­ய­ரங்க இடி­பா­டு­களில் இருந்து 130 பேர் மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கச் சொன்­னார்.

எஞ்­சி­யுள்­ள­வர்­களை மீட்­கும் பணி­யில் உக்­ரேன் படை­யி­னர் ஈடு­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­பட்­டுள்­ளது.

சீனாவை எச்­ச­ரித்த பைடன்

இதற்­கி­டையே, அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னும் சீன அதி­பர் ஸி ஸின்­பிங்­கும் காணொளி மூலம் சந்­தித்து உக்­ரேன் விவ­கா­ரம் குறித்து பேசி­னார்­கள். இச்­சந்­திப்பு, கிட்­டத்­தட்ட 2 மணி நேரம் நீடித்­தது.

ர‌ஷ்­யா­வின் கோரிக்­கை­படி, அந்­நாட்­டிற்கு சீனா ஆயுத, நிதி­யு­தவி அளிக்­குமோ என்ற அமெ­ரிக்­கா­வின் அச்­சத்­திற்கு இடை­யில் இச்­சந்­திப்பு நடை­பெற்­றது.

அப்­போது, ர‌ஷ்­யா­வுக்கு ஆத­ர­வாக செயல்­பட்­டால் சீனா அதற்­கான விளை­வு­க­ளைச் சந்­திக்க வேண்­டி­யி­ருக்­கும் என்று பைடன் சீன அதி­ப­ரி­டம் கூறி­னார்.

சீனா போரை விரும்­ப­வில்லை என்று அந்­நாட்­டின் அதி­பர் கூறி­னார். இருப்­பி­னும், ர‌ஷ்­யா­விற்கு எதி­ராக கண்­ட­னம் தெரி­விக்க சீனா­விற்கு அமெ­ரிக்கா கொடுக்கும் அழுத்­தத்­திற்கு தலை­ய­சைப்­ப­தற்­கான எந்த அறி­கு­றி­யும் தெரி­ய­வில்லை.

அதே சம­யம், இப்­பி­ரச்­சி­னைக்கு அர­ச­தந்­திர ரீதி­யில் தீர்வு காண இரு நாடு­களும் அழைப்பு விடுத்து

உள்­ளன.

இதுதவிர, தைவான் பிரச்­சி­னை­யில் தவ­றான வழி­ந­டத்­தல்­கள் அமெ­ரிக்­கா­வு­ட­னான நல்­லு­வறை முறிக்­கும் என்று ஸி ஸின்­பிங்­கும் பைடனை எச்­ச­ரித்­துள்­ளார்.

ர‌‌ஷ்­யர்­களை வர­வேற்ற

அமெ­ரிக்­கர்­கள்

உக்­ரேன் போரால் ர‌ஷ்­யா­வும் அமெ­ரிக்­கா­வும் ஒன்­றுக்கு ஒன்று எதி­ராக உள்ள நிலை­யில், அனைத்­து­லக விண்­வெளி நிலை­யத்­திற்­குச் சென்ற ர‌ஷ்ய விண்­வெளி வீரர்­களை ஏற்­கெ­னவே அங்­கி­ருந்த அமெ­ரிக்­கர்­களும் ஜெர்­மா­னி­யர்­களும் வர­வேற்­ற­னர்.

கசக்ஸ்­தா­னில் உள்ள பைசோ­னூர் ஏவு­த­ளத்­தில் இருந்து ஏவப்­பட்ட உந்­து­க­ணை­யில் சென்ற ர‌ஷ்ய வீரர்­கள் உக்­ரேன் நாட்டு தேசிய கொடி­யின் நிற­மான மஞ்­சள், நீல­நி­றத்­தில் ஆடை அணிந்து இருந்­த­னர்.

ர‌ஷ்­யா­விற்கு எதிர்ப்பு தெரி­விக்­கும் வகை­யில், அந்­நாட்­டின் விண்­வெளித் திட்­டங்­க­ளுக்கு அமெ­ரிக்கா, ஐரோப்பா, பிரிட்­டன் ஆகிய நாடு­கள் தடை விதித்­துள்­ளன.