ஓராண்டுக்குப் பிறகு சீனாவில் முதல் கிருமித்தொற்று மரணம்

ஓராண்டுக்குப் பிறகு சீனாவில் முதல் கிருமித்தொற்று மரணம்

1 mins read
a60d6c49-b242-44d5-aa79-72f25e087995
-

பெய்­ஜிங்: சீனா­வில் ஏறக்­கு­றைய ஓராண்­டுக்­குப் பிறகு முதல் முறை­யாக இரு­வர் தொற்­று காரணமாக மாண்டனர்.

உல­கில் ஆகப்­பெ­ரிய மக்­கள்­தொ­கை­யைக் கொண்ட அந்­நாட்­டில் ஓமிக்­ரான் கிருமி தொடர்ந்து வேக­மா­கப் பரவி வரு­கிறது.

இந்­நி­லை­யில் வட­கி­ழக்கு மாநி­ல­மான ஜிலி­னில் இரு­வர் தொற்­றுக்கு உயி­ரி­ழந்­துவிட்ட­தாக தேசிய சுகா­தார மன்­றம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

கடந்த 2021ஆம் ஆண்டு முழு­வதும் இரு­வர் மட்­டுமே தொற்­றுக்­குப் பலி­யா­யி­னர். கடை­சி­யாக அதே ஆண்டு ஜன­வரி 25ஆம் ேததி ஒரு­வர் உயி­ரி­ழந்­தார்.

அதன் பிறகு இப்­போ­து­தான் முதல்முறை­யாக கொவிட்-19 மர­ணச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

சீனா­வில் வெள்­ளிக்­கி­ழமை அன்று புதி­தாக 2,228 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. இந்த எண்­ணிக்கை முந்­தைய நாளில் 2,416ஆக இருந்­தது.

புதிய தொற்­றுச் சம்­ப­வங்­களில் 2,157 உள்­ளூ­ரில் பர­வி­யவை. அவற்­றில் 78 விழுக்­காடு ஜிலி­னில் பதி­வா­கி­யுள்­ளன. இதர தொற்­றுச் சம்­ப­வங்­கள் தென்­கி­ழக்கு மாநி­ல­மான ஃபூஜியா­னி­லும் குவாங்டோங்­கி­லும் இதர பகு­தி­க­ளி­லும் ஏற்­பட்டு உள்­ளன.

அறி­கு­றி­யற்ற தொற்­றுச் சம்­வங்­களை சீனா தொற்­றுச் சம்­ப­வ­மாக வகைப்­ப­டுத்­து­வ­தில்லை. இருந்­தா­லும் வெள்­ளிக்­கி­ழமை அன்று 1,823 அறி­கு­றி­யற்ற தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. முந்­தைய நாளில் இது 1,904ஆக பதி­வா­னது.

புதிய இரு மர­ணச் சம்­ப­வங்­களு­டன் சேர்த்து உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 4,638க்கு அதி­க­ரித்­துள்­ளது. சீனா­வில் நேற்று முன்தினம் வரை 128,462 தொற்றுச் சம்­ப­வங்­கள் உறுதி செய்யப் பட்டுள்ளன.