சீனாவைவிட மகிழ்ச்சியாக இருக்கும் மலேசிய மக்கள்

சீனாவைவிட மகிழ்ச்சியாக இருக்கும் மலேசிய மக்கள்

1 mins read
439e14fc-fe8b-4bb4-98c5-55cdd116b67c
பூங்கா ஒன்றில் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடும் மலேசிய குடும்பம். படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கோலா­லம்­பூர்: சீனா­வை­விட மலே சிய மக்­கள் மகிழ்ச்­சி­யாக உள்­ள­தாக ஐநா அறிக்கை கூறு­கிறது.

மகிழ்ச்­சி­யாக இருக்­கும் உலக மக்­கள் பற்­றிய ஐநா­வின் பட்­டி­யி­லில் மலே­சியா 11 இடங்­கள் முன்­னேறி 70வது இடத்­தைப் பிடித்­துள்­ளது.

முந்­தைய நான்கு ஆண்­டு­க­ளாக இந்­தப் பட்­டி­ய­லில் தொடர்ந்து சரி­வைக் கண்­டது மலே­சியா.

மார்ச் 20ஆம் தேதி கடைப்­பிடிக்­கப்­படும் அனைத்­து­லக மகிழ்ச்சி தினத்தை முன்­னிட்டு ஐநா இந்த அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளது.

மகிழ்ச்சி குறித்த மக்­க­ளின் சொந்த மதிப்­பீடு, பொரு­ளா­தார, சமூக தர­வு­க­ளின்­படி இந்தப் பட்டி­யல் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. 146 நாடு­களில் இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

ஃபின்லாந்து தொடர்ந்து ஐந்­தா­வது ஆண்­டாக முதல் இடத்­தில் உள்­ளது.

சிங்­கப்­பூர் 27வது இடத்­தில் உள்­ளது. தென்­கி­ழக்­கா­சிய நாடு­களி­லேயே மிகச்­சி­றந்த இடத்­தில் உள்­ளது சிங்­கப்­பூர்.

சீனா 72வது இடத்­தி­லும் இந்­தியா 136வது இடத்­தி­லும் உள்­ளன.