ஆஸ்திரேலியாவில் தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் ஏறுமுகம்

ஆஸ்திரேலியாவில் தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் ஏறுமுகம்

1 mins read
4a467b75-ef3e-4063-8d6b-19088941795a
முடக்கநிலை உத்தரவை எதிர்த்து மெல்பர்னில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் கைதாகினர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் ஏழு அதிகாரிகள் காயமடைந்தனர்.படம்: ஏஎஃப்பி -

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் ஒரே வாரத்­தில் 37% அதி­க­ரித்­துள்­ளது. இச்­சம்­ப­வங்­கள் ஓமிக்­ரா­னின் துணை திரி­பான ஓமிக்­ரான் பிஏ.2வோடு தொடர்­பு­டைவை.

இது ஏற்­கெ­னவே உள்ள ஓமிக்­ரானைவிட வேக­மா­கப் பர­வக்­கூடி­யது என கரு­தப்­ப­டு­வ­தால், வரும் நாள்­களில் தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை பெரு­ம­ளவு உய­ரக்­கூ­டும் என்று நிபு­ணர்­கள் கணித்து உள்­ள­னர்.

சென்ற வாரம் 295,146 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின. இந்த எண்­ணிக்கை அதற்கு முந்­திய வாரத்­தில் 215,701ஆக இருந்­தது.

நேற்று 46,422 பேரைக் கிருமி தொற்­றி­யது. அத்­து­டன் நியூ சவுத் வேல்­சில் 12 பேர், குயின்ஸ்­லாந்­தில் 10 பேர் உட்­பட 24 பேர் மாண்டு ­விட்­ட­னர்.

நியூ சவுத் வேல்­சில் 825 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின. இத­னைத் தொடர்ந்து, அம்­மா­நில அதி­கா­ரி­கள், செப்­டம்­பர் மாதம் வரை முடக்­க­நி­லையை நீட்­டித்து உத்­த­ர­விட்­ட­னர்.

அது­போல் மெல்­பர்­னின் விக்­டோ­ரியா மாநி­லத்­தி­லும் முடக்க உத்­த­ரவு நேற்று நீட்­டிக்­கப்­பட்­டது. எனவே, மக்­கள் கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வலி­யு­றுத்­தப்­பட்டுள்­ளது.