வாரத்தில் 4 நாள் வேலை; பிலிப்பீன்ஸ் பரிசீலனை

வாரத்தில் 4 நாள் வேலை; பிலிப்பீன்ஸ் பரிசீலனை

1 mins read
907cf952-e89a-493d-bc59-edebc7c61fa3
-

மணிலா: உக்­ரேன் மீதான ரஷ்­யா­வின் படை­யெ­டுப்­பால் உல­க­ள­வில் எரி­பொ­ருள் விலை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தால், எரி­சக்­தி­யைப் பாது­காக்க வாரத்­தில் நான்கு நாள் வேலை திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்து பிலிப்­பீன்ஸ் பரி­சீலித்து வரு­கிறது.

கிடு­கி­டு­வென உயர்ந்து வரும் எரி­பொ­ருள் விலை­ உயர்­வின் தாக்­கத்­தைத் தணிப்­ப­தற்­கான வழி­களை பிலிப்­பீன்ஸ் ஆராய்ந்து வரு­கிறது. இதில் குறைந்­த­பட்ச ஊதிய உயர்வு, ஓட்­டு­நர்­க­ளுக்­கான உதவி ஆகி­ய­வை­யும் அடங்­கும்.

"நான்கு நாள் நடை­முறை கொண்டு வரப்­பட்­டா­லும், ஊழி­யர்­கள் வாரத்­திற்கு 40 மணி நேர வேலை செய்­வார்­கள்.

"நாளொன்­றுக்கு 10 மணி நேரம் என வாரத்­தில் நான்கு நாள்­க­ளுக்கு அவர்­கள் வேலை செய்­வார்­கள்," என்­றார் சமூக பொரு­ளி­யல் திட்ட செய­லா­ளர் கர்ல் கென்ட்­ரிக் ‌சுவா.

வளை­குடா போர் ஏற்பட்ட காலத்­தில், எண்­ணெய் விலை உயர்ந்தபோதும் பிலிப்­பீன்ஸ் இதே நடை­மு­றை­யைப் பின்­பற்­றி­யது குறிப்­பி­டத்­தக்­கது.