சீனாவில் ஓராண்டுக்குப் பிறகு கொவிட்-19 மரணங்கள்

சீனாவில் ஓராண்டுக்குப் பிறகு கொவிட்-19 மரணங்கள்

1 mins read
2d153a42-7410-4b0c-aa4e-d4f587db646b
படம்: ஏஃபி -

சீனாவில் கொவிட்-19 தொற்றுப் பாதிப்பால் இருவர் மாண்டனர். இது ஜனவரி 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு, தொற்றுப் பாதிப்பால் பதிவான முதல் உயிரிழப்புகள்.

சென்றாண்டு முழுவதும் இரண்டே தொற்று மரணங்கள் பதிவுசெய்யப்பட்டன.

வட-கிழக்கு மாநிலமான ஜிலினின் மரணங்கள் ஏற்பட்டன. வட கொரியா, ர‌ஷ்யா ஆகிய நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ஜிலின் மாநிலத்தில் ஆக அதிக அளவில் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நாடளவில் ஓமிக்ரான் அலை வேகமாகப் பரவிவருகிறது. வெள்ளிக்கிழமை (மார்ச் 18) நிலவரப்படி 2,228 புதிய சம்பங்கள் உறுதிசெய்யப்பட்டன. மொத்தம் 128,462 சம்பவங்கள் பதிவாகின. சீனாவின் 1.4 பில்லியன் மக்கள்தொகையில் 90 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசிப் போட்டுக்கொண்டுள்ளனர். அவர்களில் முக்கால்வாசி பேர் கூடுதல் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளனர்.