ர‌‌ஷ்யா மீதான தடைகள் கொடூரமானவை: சீனா

ர‌‌ஷ்யா மீதான தடைகள் கொடூரமானவை: சீனா

1 mins read
370d511f-dcee-491a-ba92-8511b03c037f
ருமேனியாவில் தற்காலிக புகலிடமாக மாற்றப்பட்டுள்ள தங்கு விடுதி ஒன்றில் உக்ரேன் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி -

பெய்­ஜிங்: ர‌ஷ்­யா­வுக்கு எதி­ராக மேற்­கத்­திய நாடு­கள் விதித்­துள்ள பொரு­ளா­தார தடை­கள் கொடூரமானவை என்று சீனா கூறி­உள்­ளது.

நேட்டோ குறித்த மாஸ்­கோ­வின் கருத்தை ஒப்­புக்­கொண்ட சீனா­வின் துணை வெளி­யு­றவு அமைச்­சர் லீ யுச்­செங், கிழக்கு நோக்கி நேட்டோ தனது கூட்­ட­மைப்பை விரி­வு­ப­டுத்­தக்­கூ­டாது என்­றார்.

உக்­ரேன் போர் குறித்து சீனா கவலை தெரி­வித்திருந்தாலும் அந்­நாட்­டின் மீதான ர‌‌ஷ்­யா­வின் படை­யெ­டுப்­பிற்கு அது இன்­ன­மும் கண்­ட­னம் தெரி­விக்­க­வில்லை.

அதே­ச­ம­யம், ர‌ஷ்­யா­வுக்கு எதி­ராக விதிக்­கப்­பட்­டுள்ள பொரு­ளி­யல் தடை­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விக்­கும் சீனா, ஐநா பாது­காப்பு மன்­றம் அதற்கு அங்­கீ­கா­ரம் அளிக்­காத நிலை­யில், அவை ஒரு­தலை­பட்­ச­மா­னது என்­றும் சொன்­னது.

ர‌ஷ்­யா­வுக்கு எதி­ரான பொரு­ளா­தார தடை­கள் மேலும் மேலும் அதி­க­மா­கிக் கொண்டே இருப்­ப­தா­க­வும் அவர் சொன்­னார்.

"தடை­கள் எந்த பிரச்­சி­னைக்­கும் தீர்­வா­காது என்­பது மீண்­டும் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

"தடை­கள் கார­ண­மாக சாதா­ரண மக்­கள்­தான் பாதிக்­கப்­ப­டு­வார்­கள். உல­கப் பொரு­ளி­யல் மோச­ம­டை­யும்," என்­றார் அவர்.

இதற்­கி­டையே, உக்­ரே­னும் ர‌ஷ்­யா­வும் முக்­கிய பிரச்­சி­னை­கள் தொடர்­பாக, உடன்­பாட்டை நெருங்­கு­வ­தாக துருக்கி வெளி­யு­றவு அமைச்­சர் தெரி­வித்­துள்­ளார்.

இது­வரை அடைந்த முன்­னேற்­றங்­களில் இருந்து இரு நாடு­களும் பின்­வாங்­க­வில்லை என்­றால், போர் விரை­வில் முடி­வ­டை­யும் என்று நம்­பு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

ர‌ஷ்ய, உக்­ரேன் வெளி­யு­றவு அமைச்­சர்­கள் துருக்­கி­யில் இம்­மா­தம் சந்­தித்­த­னர். அப்­போது துருக்கி வெளி­யு­றவு அமைச்­ச­ரும் உடன் இருந்­தார்.