போர் எதிரொலி: உலகெங்கும் தொடர்ந்து ஏற்றம் காணும் உணவு விலைகள்

போர் எதிரொலி: உலகெங்கும் தொடர்ந்து ஏற்றம் காணும் உணவு விலைகள்

1 mins read
87b27a3e-bd38-4ee7-a662-ed2f78581061
-

உக்­ரே­னில் நடக்­கும் போரி­னால் ஏற்­பட்­டுள்ள எண்­ணெய், விவ­சாய பொருள்­க­ளின் விலை­யேற்­றம், உல­கெங்­கி­லும் உண­வுப் பொருள்­களின் விலை மேலும் அதி­க­ரிக்­கும் என்ற அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

பிப்­ர­வ­ரி­யில் உல­க­ளா­விய உணவு விலை இது­வ­ரை­யில்­லாத அள­வுக்கு அதி­க­ரித்­தது. அது, கடந்த ஆண்டு இதே காலகட்டத் தில் இருந்­த­தை­விட 24% உயர்ந்து உள்ளது.

கோது­மை­யின் விலை மட்­டும் 50% அதி­க­ரித்­துள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது.

இந்­தோ­னீ­சி­யா­விற்­குச் சென்று சேர­வேண்­டிய 160 டன் கோதுமை இது­வரை உக்­ரே­னில் மாட்­டிக்­கொண்­டுள்­ள­தாக சொன்­னார் இந்­தோ­னீ­சிய கோதுமை மாவு தயா­ரிப்­பா­ளர்­கள் சங்­கத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் ரத்னா லோப்­பிஸ். எனவே, கோதுமை இறக்­கு­ம­திக்கு மாற்று ஏற்­பாட்டுக்­கான வழி வகை­களை ஆராய்ந்து வரு­வ­தாக அவர் சொன்­னார்.

பிலிப்­பீன்­சி­லும் இதே நிலை­மை­தான். ஆனால், ர‌ஷ்யா, உக்­ரே­னு­டனான பொரு­ளா­தார தொடர்­பு­கள் குறை­வு என்­ப­தால், நேரடி வர்த்­த­கத்­தில் பெரி­ய­ள­வி­லான பாதிப்­பு­கள் இல்லை.

ரஷ்யா-உக்­ரேன் மோதல் கார­ண­மாக உரங்­கள், கால்­நடை தீவ­னங்­களின் விலை அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது, இது மலே­சி­யா­வின் உண­வுப் பாதுகாப்பு மறைமுகமாக பாதிக்கப்படுவதற்கு வழி வகுத்துள்ளது.