வெளிநாட்டுப் பயணிகளுக்குப் பாதுகாப்பான பயணம்; மலேசியாவில் மின்னியல் பயண அட்டை

வெளிநாட்டுப் பயணிகளுக்குப் பாதுகாப்பான பயணம்; மலேசியாவில் மின்னியல் பயண அட்டை

1 mins read
09d3607b-0bef-4c1d-ab07-4fe33b9148c0
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வுக்­குச் செல்­லும் வெளி­நாட்­டுப் பய­ணி­க­ளுக்கு மின்­னி­யல் பயண அட்­டை­கள் வழங்­கப்­படும்.

ஏப்­ரல் ஒன்­றாம் தேதி முதல் நாட்­டின் எல்­லை­கள் முழு­மை­யா­கத் திறக்­கும்­போது, இந்த முறை நடப்­புக்கு வரும் என அந்­நாட்டு சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

மலே­சி­யா­வுக்­குச் செல்ல விரும்­பு­வோர் கட்டா­ய­மாக 'மைசெ­ஜ­ஹாத்ரா' செய­லி­யைப் பத­வி­றக்­கம் செய்­ய­வேண்­டும். மலே­சி­யா­வுக்­குச் செல்­வ­தற்கு முன், கொவிட்-19 பரி­சோ­தனை முடி­வு­களை அந்­தச் செய­லி­யில் பதி­வேற்­றம் செய்­ய­வேண்­டும். அத­னைத் தொடர்ந்து அவர்­க­ளுக்­குப் பயணி அட்டை வழங்­கப்­படும்.

அந்த அட்­டையை வைத்­தி­ருந்­தால் மட்­டுமே அவர்­கள் விமா­னத்­தில் மலே­சி­யா­வுக்­குப் பய­ணிக்­க­மு­டி­யும். பய­ணி­கள் தடுப்­பூ­சிப் போட்­டுக்­கொண்ட நிலை குறித்த தக­வ­லும் அதில் இருக்­கும்.

இதோடு, பய­ணி­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பதை உறுதி செய்­ய சுவாச பரி­சோ­தனை வசதி வழங்­கப்­படும். பய­ணி­கள் சுவாச பரி­சோ­தனை அல்­லது 'ஏஆர்டி' எனப்­படும் ஆன்­டி­ஜன் விரை­வுப் பரி­சோ­த­னையை மலே­சி­யாவை சென்­ற­டைந்­த­வு­டன் செய்­து­கொள்­ள­லாம். சுவாச பரி­சோ­தனை மூலம் பய­ணி­கள் விமான நிலை­யத்­தில் இருக்­க­வேண்­டிய நேரம் வெகு­வாக குறை­யும் எனக் கூறப்­பட்­டது.

எல்­லை­கள் திறக்­கும்­போது, பயணி­க­ளுக்­குப் பாது­காப்­பான, தடை­யற்ற பயண அனு­ப­வத்தை வழங்க இணைந்து செயல்­படும் அந்­நாட்­டின் சுகா­தார அமைச்­சும் போக்­கு­வ­ரத்து அமைச்­சும் பல முன்னெச்சரிக்கை நடை­மு­றை­களை எளி­தாக்கி வரு­கின்­றன.