சிக்கல்கள் இருந்தாலும் வெற்றிகளை குவிக்கும் செல்சி

சிக்கல்கள் இருந்தாலும் வெற்றிகளை குவிக்கும் செல்சி

1 mins read
c341c693-5439-4c55-be15-3c1f6878cbff
-

மிடல்ஸ்பரோ: செல்சி காற்­பந்­துக் குழுவை விற்­கப் போவ­தாக அதன் உரி­மை­யா­ளர் ரோமன் அப்­ர­மோ­விச் அறி­வித்த பிறகு, செல்சி ஆறு தொடர் வெற்­றி­க­ளைப் பதிவு செய்துள்­ளது. நேற்று நடந்த எ­ஃப்ஏ கிண்­ணப் போட்டி ஒன்­றில் மிடல்ஸ்­பரோவை வீழ்த்­தி­யதே செல்­சி­யின் அண்­மைய வெற்­றி­யா­கும்.

மேன்யூ, டோட்­டன்­ஹம் என முன்­னணி குழுக்­களை வீழ்த்தி காலி­று­திக்கு முன்­னே­றிய மிடல்ஸ்­பரோ, செல்­சி­யை­யும் வீழ்த்­தி­வி­டா­லம் என்று நம்­பி­யது. ஆனால், லுக்கா­கு­வின் 15வது நிமிட கோல் அந்­நம்­பிக்­கையை குலைத்­தது. 31வது நிமி­டத்­தில் விழுந்த செல்சி யின் இன்­னொரு கோல் எதி­ர­ணியை சித­ற­டித்­தது. பிற்­பாதி ஆட்­டத்­தில் எவ்­வ­ளவோ போரா­டி­யும் மிடல்ஸ்­ப­ரோ­வால், கோல் போட முடி­ய­வில்லை. எனவே, 0-2 என்ற கோல்­க­ணக்­கில் வென்று அரை­யி­று­திக்கு முன்­னே­றி­யது செல்சி.