போராடி வென்ற இங்கிலாந்து மகளிர்

போராடி வென்ற இங்கிலாந்து மகளிர்

1 mins read
16920748-126c-43ec-a5c7-fa433e747303
-

ஆக்­லாந்து: மக­ளிர் கிரிக்­கெட் உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் கடைசி பந்து வரை போரா­டிய இங்­கி­லாந்து அணி, அரை­யி­று­திக்கு முன்­னே­று­வ­தற்­கான வாய்ப்­பைத் தொடர்ந்து தக்­க­வைத்­துக் கொண்­டுள்­ளது.

நியூ­சி­லாந்­துக்கு எதி­ரான நேற்­றைய ஆட்­டத்­தில் 204 ஓட்­டங்­கள் என்ற இலக்கை விரட்­டிய இங்­கி­லாந்து, ஒரு கட்­டத்­தில் 196 ஓட்­டங்­க­ளுக்கு 9 விக்­கெட்­டு­க­ளை­யும் இழந்து தடு­மா­றி­யது.

அப்­போது ‌‌‌ஜோடி சேர்ந்த ஷ்ருப்­சோல்-சார்லி டீன் இணை, கவ­ன­மாக விளை­யாடி, 9 ஓட்­டங்­கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்­த­னர்.

ஏற்­கெ­னவே இந்­தி­யாவை வென்­றி­ருந்­தா­லும் இனி­வ­ரும் ஆட்­டங்­களில் பாகிஸ்­தான், பங்­ளா­தே‌ஷ் அணி­களை வீழ்த்­தி­னால் மட்­டுமே இங்கிலாந்து அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.