‌ஷேன் வார்னுக்கு இறுதிச் சடங்கு

‌ஷேன் வார்னுக்கு இறுதிச் சடங்கு

1 mins read
f4dc16ed-e528-4134-8bf2-31c4e8b248db
-

மெல்­பர்ன்: மறைந்த ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் வீரர் ஷேன் வார்னின் இறு­திச் சடங்கு மெல்பர்னில் உள்ள செயின்ட் கில்டா காற்பந்து கிளப்­பில் நேற்று நடை­பெற்­றது.

இதில், ஓய்­வு­பெற்ற அணித் தலை­வர்­கள் மார்க் டெய்­லர், ஆலன் பார்­டர், முன்­னாள் இங்­கி­லாந்து அணித் தலை­வர் மைக்­கல் வான் உட்­பட குடும்­பத்­தி­னர், நண்­பர்­கள் என ஏறத்­தாழ 80 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

52 வயது வார்ன், இரண்டு வாரங்­க­ளுக்கு முன் தாய்­லாந்­தில் மாண்­டார். அவ­ரது உடல் சென்ற வாரம் மெல்­பர்­னுக்கு கொண்டு வரப்­பட்­டது.

700 விக்­கெட்­டு­க­ளுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற பெருமை வார்­னே­வுக்கு உண்டு.