ஒருவர் உயிரிழந்த பிறகு, அவரைப் புதைப்பது அல்லது தகனம் செய்வது பெரும்பாலான கலாச்சாரங்களில் வழக்கம். இந்த இரண்டு முறைகளும் சுற்றுச்சூழலுக்கு அதிகப் பாதிப்பு ஏற்படுத்துகின்றன. இதை விரும்பாத சிலர் பசுமைப் புதையல் எனும் ஒரு புதிய முறையைச் செய்துவருகின்றனர். இந்தப் போக்கு அமெரிக்காவில் புகழ்பெற்றுவருகிறது.
மாண்ட ஒருவரின் உடல் ஒரு கலனின் 60 நாள்கள் வைக்கப்படுகிறது. அதில் எந்தவொரு இரசாயனமும், பதனப் பொருள்களும் சேர்க்கப்படுவதில்லை. அதற்குப் பதில், முழுக்கமுழுக்க இயற்கை சார்ந்தப் பொருள்கள் கலனில் சேர்க்கப்படுகின்றன. உதாரணத்திற்கு வைக்கோல், மலர்கள், மற்றும் புல்.
30 நாள்கள் கழித்து கலனிலிருந்து எலும்புகள் அகற்றப்பட்டு தூளாக அறைக்கப்படுகின்றன. இது மீண்டும் கலனில் சேர்க்கப்படுகிறது.
60 நாள்கள் பின்னர், உடல் உரம் போலவே ஆகிவிடுகிறது.
பசுமைப் புதையல்களுக்காக ஒதுக்கப்பட்ட பூங்காக்களில் உரம் மண்ணில் கலக்கப்படுகிறது. உடல் இயற்கையோடு ஒன்றாகிறது.
இந்த வித்தியாசமான புதையலுக்கு விலை சுமார் $5000 டாலர். வழக்கமான இறுதிச் சடங்குகள் இதைவிட அதிக விலையாகும் எனக் கூறப்பட்டது.
எப்படி வந்தோமோ அப்படியே விடைபெறுகிறோம் என்று இந்தப் பசுமைப் புதையல்களுக்கு எளிமையான விளக்கத்தை அளிக்கிறார் அமெரிக்காவின் பசுமைப் புதையல் அமைப்பின் தலைவர். இயற்கைக்கு எந்தவொரு பாதிப்பபு அல்லது மாசு ஏற்படுத்தாமல் தங்களுடைய இறுதிச் சடங்கை நடத்த விரும்புவர்கள் பெரும்பாலானோர் இந்த முறையை தேர்தெடுக்கின்றனர். உலகில் பல நாடுகளில் இந்தப் போக்கு அதிகரித்துவருவதாகக் கூறப்பட்டது.

