இந்தோனீசியாவுக்கு வருகையளிக்கும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கான தனிமைப்படுத்திக்கொள்ளும் விதிமுறைகளை அந்நாட்டு அரசாங்கம் அகற்றியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பாலி, பிந்தான், பாத்தாம் ஆகியா தீவுகளுக்குச் செல்லும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுப்பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது. அது வெற்றிகரமாக செயல்பட்டு வருவதால், புதிய விதிமுறையை நாடு முழுவதும் நடைமுறைபடுத்த இந்தோனீசியா முடிவெடுத்துள்ளது.
இந்தோனீசியாவில் பிப்ரவரி மாதம் தொற்றுச் சம்பவங்கள் உச்சத்தில் இருந்தன. ஒப்புநோக்க இப்போது அன்றாட தொற்றுச் சம்பவங்கள் சுமார் 90 விழுக்காடு குறைந்துள்ளன. ஆனால் தொற்றுப் பாதிப்பால் தொடர்ந்து அதிகமானோர் உயிரிழக்கின்றனர். சென்ற ஞாயிற்றுக்கிழமை 139 கொவிட்-19க்குப் பலியாகினர்.


