வெல்லிங்டன்: நியூசிலாந்தின் 'நார்த் ஐலண்ட்' தீவை மோசமான புயல் தாக்கியுள்ளது. மீன்பிடிக் கப்பல் ஒன்று மூழ்கியதால் குறைந்தது மூவர் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
'நார்த்லண்ட்' கடற்கரைக்கு அருகே நிகழ்ந்த அந்த விபத்தில் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் இருவரைக் காணவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். உயிர் தப்பிய ஐவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காணாமற்போன இருவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இரண்டு ஆகாயப் படை விமானங்களும் ஒரு கடற்படைக் கப்பலும் ஈடுபட்டுள்ளதாக நியூசிலாந்து ராணுவம் கூறியது.
ஆக்லாந்து நகரில் ஒரு மணிநேரத்தில் மூன்று 76.8 மில்லிமீட்டர் அளவு மழை பெய்தது.

