பைடன் அரசாங்கம்: ரோஹிங்யா மக்களுக்கு நிகழ்ந்தது இனப் படுகொலை

பைடன் அரசாங்கம்: ரோஹிங்யா மக்களுக்கு நிகழ்ந்தது இனப் படுகொலை

1 mins read
1c6d8d7a-7431-4cdc-9d80-3c439e222b55
-

வாஷிங்­டன்: மியன்­மா­ரில் உள்ள ரோஹிங்யா சமூ­கத்­திற்கு எதி­ராக அந்­நாட்டு ராணு­வம் எடுத்த நட­வ­டிக்­கை­களை அமெ­ரிக்க அதிபர் ஜோ பைடனின் அர­சாங்­கம் இனப் படு­கொலை என்­றும் அவை மனி­தா­பிமா­னக் குற்­றங்­கள் என்­றும் அதி­கா­ர­பூர்­வ­மாக வகைப்­ப­டுத்­தி­யுள்­ளது. அமெ­ரிக்­க வெளி­யுறவு அமைச்­சர் ஆண்டனி பிளிங்­கன் நேற்று இதை அறி­விக்­கத் திட்­ட­மி­ட்டிருந்தார்.

ரோஹிங்யா விவகாரத்தில் மியன்­மாரைத் தற்­போது ஆளும் ராணுவ அர­சாங்­கம்­தான் பொறுப்­பேற்­க­வேண்­டும் என்று திட்­ட­வட்­ட­மா­கச் சொல்­வ­தற்­கான முயற்­சி­க­ளுக்கு அமெ­ரிக்­கா­வின் முடிவு கைகொ­டுக்­கும் என்று சில தரப்­பி­னர் கூறு­கின்­ற­னர்.

2017ஆம் ஆண்டு மியன்­மார் ராணு­வம் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­க­ளால் குறைந்­தது 730,000 ரோஹிங்யா மக்­கள் தங்­கள் நாட்டைவிட்டு வெளி­யேறி அண்டை நாடான பங்­ளா­தே­ஷுக்­குச் செல்ல நேரிட்­டது. பலர் கொலை செய்­யப்­பட்­ட­தா­க­வும் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளா­ன­தா­க­வும் பாதிக்­கப்­பட்ட ரோஹிங்யா மக்­கள் தெரி­வித்­த­னர். சென்ற ஆண்டு, மியன்­மாரின் ராணு­வம் முன்­னைய அரசாங்கத்தைக் கவிழ்த்­து ஆட்சியைப் பிடித்தது.