பங்ளாதேஷ் படகு விபத்தில் குறைந்தது ஆறு பேர் மரணம்

பங்ளாதேஷ் படகு விபத்தில் குறைந்தது ஆறு பேர் மரணம்

2 mins read
d28753a7-8cbb-4e59-9ebc-608d55a8b3da
பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவிற்கு அருகே இந்தப் படகு விபத்து நிகழ்ந்தது. படம்: ஏஎஃப்பி -

டாக்கா: பங்­ளா­தே­ஷில் சரக்­குக் கப்­பல் ஒன்று பலரை ஏந்­திச் சென்ற பட­கின் மீது மோதி­ய­தில் குறைந்­தது ஆறு பேர் மாண்­ட­னர். விபத்­துக்கு உள்­ளான படகில் எத்­தனை பேர் இருந்­த­னர் என்­பதை உறு­திப்­ப­டுத்த முடி­ய­வில்லை என்று தீய­ணைப்பு அதி­காரி ஒரு­வர் கூறியதாக அல் ஜசீரா செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.

நேற்று முன்­தி­னம் விபத்து நிகழ்ந்­த­போது படகில் 30லிருந்து 50 பேர் இருந்­த­தாக உள்­ளூர் ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

இரண்டு சிறு­வர்­கள், இரண்டு பெண்­கள், ஓர் ஆண் ஆகி­யோ­ரின் உடல்­கள் தண்­ணீ­ரில் மிதந்­து­கொண்­டி­ருந்­த­தாக மீட்புப் பணி­களில் ஈடு­பட்ட தீய­ணைப்பு அதி­கா­ரி­கள் உள்­ளிட்­டோர் கூறி­னர்.

ஒரு­வர் மருத்துவ­ம­னை­யில் உயி­ரி­ழந்­தார்.

விபத்து நிகழ்ந்த பிறகு சுமார் 24 பேர் கரைக்கு நீந்திச் சென்றதாகக் காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர். பலர் பயத்­தில் அல­றியதையும் தண்­ணீ­ரில் குதித்­துத் தங்­க­ளைக் காப்­பாற்­றிக் கொள்ள முயற்சி செய்­த­தையும் பங்­­ளா­தேஷ் ஊட­கங்­கள் வெளி­யிட்ட காணொ­ளி­கள் காண்­பித்­தன.

பங்­ளா­தே­ஷில் படகு விபத்­து­கள் அடிக்­கடி நிகழ்வதுண்டு. பாது­காப்பு விதி­மு­றை­கள் சரி­யாக இல்­லா­த­தும் அள­வுக்கு அதி­க­மா­ன கூட்­டம் சேர்­வதும் இதற்­குக் கார­ணங்­க­ளா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஜலோகாட்டி நகருக்கு ஆருகே நிகழ்ந்த படகு விபத்தில் சுமார் 50 பேர் மாண்டனர், 70க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த விபத்து ஒன்றிலும் பலர் மாண்டனர்.

1991ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பங்ளாதேஷில் சுமார் 550 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் 3,600க்கும் அதிகமானோர் மரணமடைந்தனர்.