ஹாங்காங் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது

ஹாங்காங் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது

1 mins read
ebe7a761-7767-4080-8d5b-aa5eb14c1f46
விமானத் தடைகளை ஹாங்காங் விலக்கியது. தனிமை உத்தரவு தொடர்பிலான நிபந்தனைகளையும் ஹாங்காங் தளர்த்தவுள்ளது.படம்: இபிஏ -

ஹாங்­காங்: விமானச் சேவை­க­ளுக்கு இருந்த தடை­களை ஹாங்­காங் நீக்­கி­யுள்­ளது. மேலும், பய­ணி­க­ளுக்­கான தனி­மைப்­ப­டுத்­தும் உத்­த­ர­வும் தளர்த்­தப்­பட்­டுள்­ளது.

ஹாங்­காங்­கில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை குறைந்­த­தைத் தொடர்ந்து அதன் தலை­வர் கேரி லாம் மாற்­றங்­களை நேற்று அறி­வித்­தார். ஆஸ்­தி­ரே­லியா, பிரிட்டன், பிரான்ஸ், இந்­தியா, பிலிப்பீன்ஸ் உள்­ளிட்ட ஒன்­பது நாடு­க­ளுக்கு நடப்­பில் இருந்த விமா­னச் சேவைத் தடை அடுத்த மாதம் ஒன்­றாம் தேதி முதல் அகற்­றப்­ப­ட­வுள்ளது.

இரண்டு முறை தடுப்­பூசி போட்­டுக்­கொண்டுள்ள ஹாங்­காங் வாசி­க­ளுக்கு அப்­ப­கு­திக்­குத் திரும்­பும்­போது நிர்­ணயிக்­கப்­பட்ட ஹோட்­ட­லில் 14 நாள்­களுக்­குப் பதிலாக ஏழு நாள்­கள் தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்­டால் போதும்.

இதற்கிடையே, சீனா­வின் தொழில்­நுட்ப மைய­மான ஷென்­சன் நக­ரில் நடப்­பில் இருந்த முடக்­க­நிலை அகற்­றப்­பட்டுள்­ளது.