சீன விமான விபத்து: யாரும் உயிருடன் இருக்க சாத்தியம் இல்லை

சீன விமான விபத்து: யாரும் உயிருடன் இருக்க சாத்தியம் இல்லை

1 mins read
6c2aa146-65be-4e3e-bf80-aff009588e5c
-
multi-img1 of 3

சீனாவில் 132 பேருடன் பயணம் செய்துகொண்டிருந்த விமானம் குவாங்ஸி மலைப்பகுதியில் நொறுங்கியதைத் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. யாரும் உயிருடன் இருக்கச் சாத்தியம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

போயிங் 737 ரக சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தின பகுதிகள் மலைப் பகுதியில் சிதைந்து கிடப்பதாகக் கூறப்பட்டது. பெரும்பாலானவை கருகிய நிலையில் உள்ளன. சில சடலங்களும் காணப்பட்டிருப்பதாகச் சீன ஊடகம் தெரிவித்தது. அடையாள அட்டைகள், பணப் பைகள் போன்ற தனிநபர் பொருள்களும் சம்ப இடத்தில் கண்டெடுக்கப்பட்டன.

குன்மிங் நகரிலிருந்து குவாங்சோ நகருக்குப் பயணம் செய்துகொண்டிருந்தபோது, வுசாவ் மாநிலத்தில் விமானம் விபத்துக்குள்ளானது. சுமார் 29,000 அடியிலிருந்து விமானம் தலைகீழாக பூமியை நோக்கி வேகமாக பாயும் காணொளி வெளியாகியுள்ளது. விமானம் மலையில் நொறுங்கி தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுபோன்ற உயரத்திலிருந்து ஏற்படும் விமான விபத்துகளுக்குப் பெரும்பாலும் வானிலை, விமானியின் தவறு அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்ட நாசவேலை ஆகியவை காரணங்களாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் கருத்துரைத்தனர்.

2010ஆம் ஆண்டுக்குப் பிறகு, சீனாவில் நடந்துள்ள ஆக மோசமான பயணிகள் விமான விபத்து இது எனக் கூறப்பட்டது. அந்த விபத்தில் விமானத்தில் இருந்து 96 பேரில் 44 பேர் உயிரிழந்தனர்.