பரிந்துரைக்கப்பட்ட காற்றுத் தரத்தை எந்நாடும் எட்டவில்லை

பரிந்துரைக்கப்பட்ட காற்றுத் தரத்தை எந்நாடும் எட்டவில்லை

1 mins read
4d3f91ff-6bb9-44ac-a72c-a109b83a8027
-

‌ஷாங்­காய்: உலக சுகா­தார நிறு­வ­னம் வரை­ய­றுத்த காற்று தர நிலையை சென்ற ஆண்­டில் எந்­த­வொரு நாடும் எட்­ட­வில்லை என மாசு­பாடு தரவு குறித்த ஆய்வு ஒன்று கூறு­கிறது. கிட்­டத்­தட்ட 6,475 நக­ரங்­களில் இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

காற்று தூய்­மைக்­கேட்­டின் ஆண்டு சரா­சரி ஒரு கன­மீட்­ட­ருக்கு பிஎம்2.5 குறி­யீடு 5 மைக்­ரோ­கி­ரா­மிற்கு அதி­க­மாக இருக்­கக்­கூ­டாது என்று நிறு­வ­னம் பரிந்­து­ரைத்­துள்­ளது.

ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்ட நக­ரங்­களில் வெறும் 3.4% நக­ரங்­கள் மட்­டுமே அந்த காற்­றுத் தரத்தை எட்­டி­ய­தாக ஐகி­யூ­ஏர் எனும் சுவிட்­சர்­லாந்து நிறு­வ­னம் தெரி­வித்­தது.

காற்று மாசு­பாட்­டைக் குறைக்க பெரு­மு­யற்சி எடுத்து வரும் சீனா, காற்­றின் தரம் மோச­மாக உள்ள நாடு­க­ளின் பட்­டி­ய­லில், 14வது இடத்­தில் இருந்து 22வது இடத்­திற்­குக் கீழி­றங்­கி­யுள்­ளது.

இந்­தி­யா­வின் பிவாடி, காசி­யா­பாத் ஆகிய நக­ரங்­கள் இப்­பட்­டி­ய­லில் முதல் இரண்டு இடங்­களிலும் சீனா­வின் ஹோடன் நக­ரம் மூன்­றா­வது இடத்­திலும் உள்­ளன.