சுவீடன் பள்ளியில் தாக்குதல்: இருவர் மரணம்; மாணவர் கைது

1 mins read
8b52a868-0703-4d48-8cc0-078c59f9336f
தாக்குதல் நடத்தப்பட்ட சுவீடன் உயர்நிலை பள்ளியில் மாணவனை கைது செய்த காவல்துறையினர், பள்ளியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். படம்: ‌‌ஏஎஃப்பி -

ஸ்டாக்­ஹோம்: சுவீ­டன் நாட்­டின் தெற்­குப் பகு­தி­யில் உள்ள மல்மோ லத்­தீன்ஸ்­கோலா நகர உயர்­நி­லைப்­பள்ளி ஒன்­றில் நடந்த கத்­திக்­குத்து சம்­ப­வத்­தில் இரண்டு பெண்­கள் மாண்­டு­விட்­ட­னர். இது­தொ­டர்­பாக 18 வயது பள்ளி மாண­வர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.

50 வயது மதிக்­கத்­தக்க அந்த இரண்டு பெண்­களும் பள்ளி ஊழி­யர்­கள் என்று காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.

தாக்­கு­தலை நடத்­திய மாண­வர், அவ­சர எண்­ணிற்கு அழைத்து

2 பேரை கொன்­று­விட்­டேன் என்­றும் தான் எங்­கி­ருந்து பேசு­கி­றேன் என்ற விவ­ரம் பற்­றி­யும் காவல்­து­றை­யி­ன­ரி­டம் தெரி­வித்­த­தாக உள்­ளூர் ஊட­கச் செய்தி கூறு­கிறது. அவன் கத்தி, கோடரி ஆகி­ய­வற்றை வைத்­தி­ருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

உட­ன­டி­யாக சம்­பவ இடத்­திற்கு விரைந்த காவல்துறையினர், அந்த மாண­வரைக் கைது செய்­த­னர்.

முன்­ன­தாக, தாக்­கு­தல் சம்­ப­வத்­தின்­போது, அவ்­வி­டத்­தில் கிட்­டத்­தட்ட 50 பேர் இருந்­த­தா­க­வும் அவர்­களில் இரண்டு பெண்­கள் காய­ம­டைந்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட அப்­பெண்­கள், சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னார்.

இந்த தாக்­கு­த­லுக்­கான எந்த உள்­நோக்­க­மும் இது­வரை தெரிய வர­வில்லை என விசா­ரணை அதி­காரி ஆசா நில்­சன் கூறி­னார்.

சுவீ­ட­னில் பள்­ளி­யில் தாக்­கு­தல் அதி­க­ரித்து வரு­கின்­றன. கடந்த ஜன­வ­ரி­யில், தெற்கு ஸ்வீ­ட­னில் ஆசி­ரி­யர், மாண­வரை தாக்கி காயப்­ப­டுத்­திய 16 வயது மாண­வர் கைது செய்­யப்­பட்­டார்.

அதற்கு முன்பு ஆகஸ்ட் மாதம் 45 வயது பள்ளி ஊழி­யரை தாக்­கிய மாண­வர் ஒரு­வர் கைதா­னார்.