வெலிங்டன்: தென்கொரியாவில் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 10 மில்லியனைக் கடந்துவிட்டது. அதாவது அந்நாட்டின் மக்கள்தொகையில் ஏறத்தாழ
20 விழுக்காட்டினரைக் கிருமி தொற்றியுள்ளது.
மோசமாக பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தொற்று காரணமாக ஏற்படும் உயிரிழப்பும் அதிகரித்து
உள்ளது.
மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, தென்கொரியாவில் தொற்றுச் சம்பவங்களும் மரணமும் குறைவாகும்.
இருப்பினும் சென்ற ஆறு வாரங்களில், அங்கு உயிரிழப்பு இரட்டிப்பாகி உள்ளது.
சென்ற வெள்ளிக்கிழமை ஆக அதிகமாக ஒரே நாளில் 429 பேர் மாண்டுவிட்டனர்.
எனவே, அந்நாட்டின் தகனச் சாலைகள் உடல்களைத் தகனம் செய்ய முடியாமல் திணறுகின்றன.
நாட்டில் உள்ள தகனச் சாலைகள், நாளொன்றுக்கு ஏழு சடலங்களை எரிக்கும் வகையில் கூடுதல் நேரம் இயங்க சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
உடல்களைப் பாதுகாத்து வைக்கும் திறன்களை அதிகரிக்குமாறு, இறுதிச் சடங்கு நிலையங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
அதேபோல தகன நிலையங்களில் உடல்கள் தேங்குவதைத் தடுக்கும் வகையில், தங்களின் வட்டாரத்திற்கு வெளியில் இருந்து வரும் உடல்களையும் தகனத்திற்கு எடுத்துக்கொள்ளும்படி ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சோல் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை அதிகாரியான
ஓ சேயோங் ஹெயான், "பல்கலைக்கழக மருத்துவமனையில் உள்ள 13 பிணவறைகள் நிரம்பிவிட்டன.
"இறந்தவர்களின் குடும்பங்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கும் மேலாக இறந்தவருக்கான இறுதிச் சடங்கிற்காக காத்திருக்க வேண்டி இருக்கிறது," என்றார்.

