25 வயதிலேயே ஓய்வை அறிவித்தார் ஆ‌ஷ்லே பார்டி

25 வயதிலேயே ஓய்வை அறிவித்தார் ஆ‌ஷ்லே பார்டி

1 mins read
9ab1d399-7191-4625-8256-31961bacaf0f
-

மெல்­பர்ன்: உல­கின் முதல்­நிலை டென்­னிஸ் வீராங்­க­னை­யான ஆஸ்திரே­லி­யா­வைச் சேர்ந்த ஆ‌ஷ்லே பார்டி (படம்) ஓய்வை அறி­வித்து ஒட்­டு­மொத்த டென்­னிஸ் உல­கை­யும் அதிர்ச்­சி­யில் ஆழ்த்­தி­யுள்­ளார்.

25 வயதே ஆன ஆ‌ஷ்லே பார்டி, மூன்று முறை கிராண்ட்சி­லாம் பட்டங்­களை வென்­ற­வர் என்­பது குறிப்­பிடத்­தக்­கது.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் டென்­னிஸ் போட்­டி­களில் பங்­கேற்று வந்த ஆ‌ஷ்லே பார்டி, இது­வரை 15 அனைத்­து­லக வெற்­றி­க­ளைப் பெற்று

உள்­ளார்.

2019ஆம் ஆண்டு பிரெஞ்சு பொது­வி­ரு­தை­யும் 2021ஆம் ஆண்டு விம்பிள்­டன் பட்­டத்­தை­யும் இரண்டு மாதங்­க­ளுக்கு முன்பு ஆஸ்­தி­ரே­லிய பொது­வி­ரு­தை­யும் வென்­றுள்­ளார்.

சொந்த மண்­ணில் பொது­வி­ருதை வென்ற இரண்­டா­வது ஆஸ்­தி­ரே­லி­யர் இவர். டென்­னிஸ் தர­வ­ரி­சைப்­பட்­டி­ய­லில் முதல் இடத்­தைப் பிடித்த 2வது ஆஸ்­தி­ரே­லிய வீராங்­கனையும் இவர்தான்.

இவர் கடந்த 2 ஆண்­டிற்­கும் மேலாக தொடர்ந்து முத­லி­டத்­தில் நீடித்து வரு­கி­றார். இவர் ஏற்­கெ­னவே கடந்த 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்­றார். பின்­னர் 2016ல் மீண்­டும் டென்­னிஸ் விளை­யாட்­டிற்கு வந்து முதலிடம் பிடித்­தி­ருந்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. படம்: இபிஏ