லண்டன்: ஹாங்காங்கில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் குறையத் தொடங்கியுள்ளன. எனவே, அங்கு தொடர்பு தடமறிதல் நடவடிக்கை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது ஹாங்காங் கிருமித்தொற்றை முற்றிலும் துடைத்தொழிக்கும் திட்டத்தைக் கைவிடவில்லை என்பதைக் காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஹாங்காங்கில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, இந்த நடைமுறை சென்ற பிப்ரவரி மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தொற்றுக்கு ஆளானவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் எனவே கட்டாயமாக கிருமித்தொற்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென்றும் நேற்று 10 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்பொழுது அதிக தொற்றுச் சம்பவங்கள் உள்ள இடங்களுக்குச் சென்றவர்களுக்கு மட்டுமே இந்த நோட்டீஸ் அனுப்பப்படுவதாக சுகாதார அதிகாரிகள் கூறினர்.

