செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
ed2568a6-2542-4fac-b65d-29cb6878ca05
-

திறக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் பெண்கள் பள்ளியை மூடிய தலிபான்

காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்நிலை பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில், அவற்றை மீண்டும் மூடும்படி தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமிய சட்டத்தின்படி, மகளிர் கல்விக்கான திட்டங்களை வரையறுத்த பிறகு, பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் அதுவரை உயர்நிலை பெண்கள் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, பெண் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

‌ஷாங்காயில் தொற்று அதிகரிப்பு

பெய்ஜிங்: சீனாவின் ‌ஷாங்காய் நகரில் தொடர்ந்து ஆறாவது நாளாக அறிகுறியற்ற தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அங்கு ஒட்டுமொத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், குறிப்பிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். சுரங்கப் பாதை ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. அங்கு இதுவரை 1,000 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், ‌ஷாங்காய் நகரம் முற்றிலுமாக முடக்கப்படும் என்ற வதந்தியை அந்நகர அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

மதுப்பழக்கத்தால் அதிக உயிரிழப்பு

வா‌‌ஷிங்டன்: கொள்ளைநோய் காலத்தில் அமெரிக்காவில் மதுப்பழக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அமெரிக்க மருத்துவ சங்கத்தின் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. 2019ல் 79,000ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2020ல் 99,000ஆக உயர்ந்தது. முடக்கநிலையின்போது ஏற்பட்ட மனஅழுத்தத்தைச் சமாளிக்க மதுப்பழக்கம் அதிகரித்ததாக அந்த ஆய்வு கூறுகிறது.