'உக்ரேன்மீது படையெடுத்து புட்டின் தவறிழைத்துவிட்டார்'

'உக்ரேன்மீது படையெடுத்து புட்டின் தவறிழைத்துவிட்டார்'

2 mins read
7324cdec-b51e-4f1e-825b-4ad0d64688a5
இத்தாலியக் கவிஞரும் எழுத்தாளரும், தத்துவஞானியுமான டான்டே அலிகேரியின் உருவச் சிலை, ர‌ஷ்யப் படையினரின் தாக்குதலில் சேதமடையாமல் இருக்க, உக்ரேனிய ஊழியர்கள் அதனை மணல்மூட்டைகளைக் கொண்டு மூடுகின்றனர். படம்: ஏஎஃப்பி -

லிவிவ்: உக்­ரேன்­மீது படை­யெடுத்து, புட்­டின் மிகப்­பெ­ரும் தவற்­றைச் செய்­து­விட்­டார் என்று நேட்டோ கூட்­ட­மைப்­பின் உச்சநிலை ­மாநாட்­டில் பேசிய அதன் தலை­வர் ஜென்ஸ் ஸ்டோ­லன்­பர்க் கூறி­யுள்­ளார்.

மேலும் ருமே­னியா, ஹங்­கேரி, ஸ்லோ­வாக்­கியா, பல்­கே­ரியா ஆகிய கிழக்கு நாடு­களில் தமது ராணுவ பலத்தை இரட்­டிப்­பாக்­கு­வ­தாக நேட்டோ அறி­வித்­துள்­ளது.

ர‌ஷ்யத் தரப்­பில் இருந்து ரசா­யன, உயி­ரி­யல், அணு­சக்தி அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு வாய்ப்பு உள்ள நிலை­யில், நாடு­கள் அவற்றை எதிர்­கொள்ள நேட்டோ உத­வும் என்­றும் அது கூறி­யது.

ர‌ஷ்யா-உக்­ரேன் விவ­கா­ரம் குறித்து, நேட்டோ, ஜி-7, ஐரோப்­பிய ஒன்­றி­யத் தலை­வர்­க­ளு­டன் பேச்சு நடத்த அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் பிர­சல்ஸ் சென்­று

உள்­ளார்.

இந்த மூன்று சந்­திப்­பு­க­ளின்­போது, உக்­ரே­னின் உண்­மை­யான நண்­பன் யார், துரோகி யார் என்­பது தெரிந்­து­வி­டும் என்று உக்ரே னிய அதி­பர் ஸெலன்ஸ்கி கூறி­உள்­ளார்.

அத்­து­டன், உக்­ரே­னுக்கு ஆத­ர­வாக உலக மக்­கள் அனை­வ­ரும் குரல் கொடுக்க வேண்­டும் என்­றும் அவர் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

"உங்­கள் வீடு­கள், அலு­வ­ல­கங்­கள், பள்­ளி­க­ளை­விட்டு வெளியே வந்து அமை­திக்­காக குரல் கொடுங்­கள். உக்­ரே­னுக்கு ஆத­ர­வாகப் போரா­டுங்­கள்," என்று காணொளி ஒன்­றில் பேசிய அவர் கேட்­டுக்­கொண்­டார்.

ஒரு மாத­மாக நடந்­து­வ­ரும் ரஷ்­யா­வின் தாக்­கு­த­லைத் தொடர்ந்து, உக்­ரே­னிய மக்­கள்­தொ­கை­யில் கால்­வா­சிப் பேர் அக­தி­க­ளாக அண்­டை­நா­டு­களில் தஞ்­ச­ம­டைந்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், ரஷ்ய அதி­பர் புட்­டி­னின் ஆலோ­ச­க­ரான அன்­டோலி சுபைஸ், அப்­ப­த­வி­யில் இருந்து வில­கி­விட்­டார். அத்­து­டன் அவர் ரஷ்­யா­வை­விட்டே வெளி­யேறி விட்­டார். கடந்த வாரம் அர்­காடி ட்வோர்­கோ­விச் என்ற பொரு­ளா­தார நிபு­ண­ரும் ரஷ்ய ஆலோ­சனை குழு­வில் இருந்து வில­கி­னார்.