பாகிஸ்தான் பிரதமர் பதவி விலக மறுப்பு

பாகிஸ்தான் பிரதமர் பதவி விலக மறுப்பு

1 mins read
063d7c5f-a384-4909-8151-8b22b8185ec7
-

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்சியினர் 20 பேர் எதிர்க்கட்சியில் இணையப் போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் அவருடைய ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மைக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் அவரைப் பதவி விலக தொடர்ந்து வலியுறுத்துகின்றன.

இந்நிலையில், "என்ன நடந்தாலும் சரி, பதவி விலகப்போவதில்லை. நான் போராடாமல், விட்டுக்கொடுக்க மாட்டேன்," என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

தனிப் பெரும்பான்மைக்கு அவருக்குக் குறைந்தது 172 உறுப்பினர்கள் தேவை. எதிர்க் கட்சிகள் 163 உறுப்பினர்களைக் கொண்டு உள்ளது. ஆனால், இம்ரானின் கட்சி உறுப்பினர் களின் ஆதரவு கிடைத்தால், அது பெரும்பான்மை பெறக்கூடும்.