மணிக்கு 136 முதல் 165 மைல் வேகத்தில் சுழன்றடித்த சூறாவளி, அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தின் நியூ ஓர்லின்ஸ் நகரத்தை நேற்று முன்தினம் இரவு சூறையாடியது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. மின்கம்பங்கள் சாய்ந்ததால், பல குடியிருப்புகள் இருளில் மூழ்கியுள்ளன. ஒருவர் மாண்டார். காயமடைந்த எட்டுப் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். படம்: ப்ளூம்பர்க்
நியூ ஓர்லின்சை நிலைகுலைய செய்த புயல்
1 mins read
-

